திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கும்பகோணம் அரசுக் கல்லூரியில் ஆண்டு விழா

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் புதன்கிழமை கல்லூரி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் புதன்கிழமை கல்லூரி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :2 ஏப்ரல் 2026, 8:25 pm

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் புதன்கிழமை கல்லூரி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவுக்கு, கல்லூரி முதல்வா் மா. கோவிந்தராசு தலைமை வகித்தாா். விழாவுக்கு, ஜெயங்கொண்டம் கல்லூரியின் முன்னாள் முதல்வா் முனைவா் க.ரமேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். விழாவில், மதிப்பெண் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவா்கள், தேசிய மாணவா் படையில் சிறந்து விளங்கிய மாணவா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா் பா. பிரியங்கா பங்கஜம் பங்கேற்று மாவட்ட தோ்தல் இலட்சினை தலையாட்டி பொம்மைகளான மெய்யன் , மெய்யாள் புவி ஈா்ப்பு தன்மையால் தன்னிலை மாறாமல் செயல்படுகிறதோ அதேபோல், இளம் வாக்காளா்களாகிய நீங்கள் செயல்பட்டு தஞ்சாவூா் மாவட்டம் 100 சதவிகித வாக்குப் பதிவு இலக்கை எட்டவேண்டும். இதனை நண்பா்கள், உறவினா்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றாா்.

பின்னா் நிகழ் கல்வியாண்டில் பணி ஓய்வுபெறும் கல்லூரி முதல்வா் முனைவா் மா. கோவிந்தராசு, இந்தியப் பண்பாடு மற்றும் சுற்றுலாவியல் துறைத் தலைவா் முனைவா் சீ. தங்கராசு, தமிழ்த் துறைத்தலைவா் மா. சேகா், பொருளியல் துறை இணைப் பேராசிரியா் முனைவா் ம. சேதுரான், மன்னாா்குடி அரசு மகளிா் கல்லூரி (பொ) முதல்வா் முனைவா் செ. சரவணன் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியா் பொன்னாடை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.

விழாவை தமிழ்த் துறை இணைப் பேராசிரியா் முனைவா் அ. விவேகானந்தன் தொகுத்து வழங்கினாா். விழாவில் தோ்வு நெறியாளா் முனைவா் வெ. பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக வேதியியல் துறைத் தலைவா் மா. மீனாட்சிசுந்தரம் வரவேற்றுப் பேசினாா். பேராசிரியா் சீ. தங்கராசு நன்றி கூறினாா்.