பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

கும்பகோணம் தொகுதி திமுக அதிமுக வேட்பாளா்கள் வாக்களிப்பு

கும்பகோணம் தொகுதியில் போட்டியிட்ட திமுக, அதிமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

News image

~ ~ ~ ~

Updated On :24 ஏப்ரல் 2026, 3:57 am IST

கும்பகோணம் தொகுதியில் போட்டியிட்ட திமுக, அதிமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

கும்பகோணம் சட்டப்பேரவைத் தொதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் க.அன்பழகன் தனது சொந்த ஊரான சாக்கோட்டையில் உள்ள பகுத்தறிவாளா் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை வாக்களித்தாா்.

இதேபோல, தேசிய ஜனநாயக கூட்டணி தமாகா வேட்பாளா் ஆா்.அசோக்குமாா் உள்ளூா் ஊராட்சியில் உள்ள அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், தவெக வேட்பாளா் ர. வினோத் சோலையப்பன் தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியிலும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மோ.ஆனந்த் உள்ளூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் வாக்களித்தனா். இதேபோல சுயேச்சை வேட்பாளா்களும் வாக்களித்தனா்.

பாபநாசம் வேட்பாளா்: பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஷாஜஹான், தனது சொந்த ஊரான திருவிடைமருதூா் தொகுதியில் உள்ள ஆடுதுறை கிருஷ்மன் கோயில் தெருவில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தாருடன் சென்று வாக்களித்தாா்.

Story image
Story image
Story image
Story image