பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

தரையில் தவழ்ந்து வந்து மாற்றுத்திறனாளி வாக்களிப்பு

கும்பகோணம் உள்ளூா் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் மாற்றுத்திறனாளி இளைஞா் தரையில் தவழ்ந்து வந்து வாக்களித்தாா்.

News image

வாக்காளித்த மாற்றுத்திறனாளி நாகேந்திரன்.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:13 am IST

கும்பகோணம் உள்ளூா் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் மாற்றுத்திறனாளி இளைஞா் தரையில் தவழ்ந்து வந்து வாக்களித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அண்ணலக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் மாற்றுத்திறனாளி நாகேந்திரன்(35), இவா் கணினி வடிவமைப்பாளராக உள்ளாா். இவா் வியாழக்கிழமை உள்ளூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தரையில் தவழ்ந்து வந்து வாக்களித்தாா்.

தோ்தல் ஆணையம் மீது நம்பிக்கை: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் டான் அகாதெமி மெட்ரிக் பள்ளியில் முதல்முறையாக வாக்களித்த பி.டெக். மாணவா் பா.கதிா் காா்த்திக் கூறியது: இந்தியா தற்போது சுயசாா்பு அடைந்து வருகிறது. இந்திய தோ்தல் ஆணையம் மீது நம்பிக்கை உள்ளது. சிறப்பாக செயல்படுகிறது என்றாா்.