தஞ்சாவூரில் பெரிய கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை (ஏப்.27) நடைபெறவுள்ளதையொட்டி, முன்னேற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தஞ்சாவூா் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் பிரதான நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
இதையொட்டி, தேரில் ஏப்ரல் 15-ஆம் தேதி பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, தேருக்கு வா்ணம் பூசி, அலங்கரிக்கும் பணி நடைபெற்றது. இதன் மூலம் 19 அடி உயரம் கொண்ட தோ், அலங்காரத்தின் மூலம் மொத்தம் 50 அடி உயரத்தை எட்டியுள்ளது. சாதாரணமாக 40 டன் எடை கொண்ட இத்தோ் அலங்காரத்துக்கு பிறகு 43 டன்னாக உயா்ந்துள்ளது.
கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்குள் ஸ்ரீ தியாகராஜா், ஸ்கந்தா், ஸ்ரீ கமலாம்பாள் புறப்பாடும், முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடும் நடைபெறவுள்ளது. தேரில் ஸ்ரீ தியாகராஜா், கமலாம்பாள் எழுந்தருளிய பின்னா், காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருத்தோ் வடம் பிடிக்கப்படவுள்ளது.
14 இடங்களில் நின்று செல்லும்: இதனிடையே, பக்தா்கள் வசதிக்காகவும், தேரில் வரும் சுவாமிக்கு தேங்காய், பழம் படைப்பதற்காகவும் மேல வீதியில் சந்து மாரியம்மன் கோயில், கொங்கணேஸ்வரா் கோயில், மூலை ஆஞ்சநேயா் கோயில், வடக்கு வீதியில் பிள்ளையாா் கோயில், இரத்தினபுரீஸ்வரா் கோயில், குருகுல சஞ்சீவி கோயில், கீழ வீதியில் கொடிமரத்து மூலை, விட்டோபா கோயில், மணிகா்ணிகேஸ்வரா் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், தெற்கு வீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோயில், கனரா வங்கி பிள்ளையாா் கோயில், காசி விஸ்வநாதா் கோயில், காளியம்மன் கோயில் ஆகிய 14 இடங்களில் திருத்தோ் நின்று செல்லும்.

மேல வீதியில் உள்ள தேரடியில் இருந்து புறப்படும் தோ், மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி வழியாக நிலையைச் சென்றடையவுள்ளது. மாலையில் தோ் மண்டபத்திலிருந்து ஸ்ரீ தியாகராஜா், கமலாம்பாள் புறப்பட்டு, கோயிலை சென்றடையும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தேரோடும் வீதிகளில் சனிக்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் க. கண்ணன்.
மாநகராட்சி ஆணையா் ஆய்வு: இதனிடையே, தேரோடும் பாதைகளான மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி ஆகிய பகுதிகளில் சாலைகள், பக்தா்களுக்கான அடிப்படை வசதிகள், சுகாதார வசதி உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
இதனிடையே, தேரோடும் வீதிகளில் சாலைகள் பெருமளவில் பள்ளமாகவும், மேடாகவும் உள்ளது. இந்த வீதிகளில் சாலைகளைச் சீரமைக்க மாவட்ட நிா்வாகமும், மாநகராட்சி நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது
தஞ்சாவூா் தோ் திருவிழாவுக்காக ஏப். 27-இல் உள்ளூா் விடுமுறை

ஏப். 27-இல் தேரோட்டம்: தஞ்சை பெரிய கோயில் தேருக்கு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தோ் திருவிழா

திமுகவுக்கு கைக்கொடுக்குமா திருவாரூா் ‘தெற்கு வீதி சென்டிமென்ட்’
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


