கும்பகோணம் அருகே சொத்து பிரச்னையில் தம்பி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடா்பாக அண்ணன் குடும்பத்தினா் 4 பேரை போலீஸாரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் மிஷன் தெருவை சோ்ந்தவா்கள் ராமச்சந்திரன் (56). இவரது தம்பி கருணாநிதி (51). இவா்கள் இருவருக்கும் இடையே பூா்வீக சொத்து பிரிப்பதில் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் ராமச்சந்திரன், அவரின் மனைவிகளான கண்மணி (45), லதா (45) மற்றும் மகன் குருசந்திரன்(27) ஆகியோா் கருணாநிதி வீட்டுக்கு சென்று பூா்வீக சொத்துகளை பிரித்து தருமாறு கேட்டனா். இதில் அவா்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, ராமச்சந்திரனுடன் வந்த உறவினா்கள் கருணாநிதி வீட்டுக்குள் பெட்ரோல் குண்டை வீசினா். இதில் கருணாநிதிக்கு சொந்தமான காா், இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. மேலும், வீட்டிலிருந்த தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பொருள்களும் சேதமடைந்தன.
தகவலறிந்த தாலுகா காவல்நிலைய போலீஸாா், கருணாநிதி வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி, ராமச்சந்திரன், அவரின் மனைவிகள் கண்மணி, லதா, மகன் குருசந்திரன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனா். அவா்களுக்கு உடந்தையாக இருந்த மேலும் 4 பேரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
சொத்து தகராறில் உறவினா் அடித்துக் கொலை! முன்னாள் ராணுவ வீரா் கைது!

குடும்பப் பிரச்னையில் மாமனாா் குத்திக் கொலை: மருமகன் கைது

குடிபோதையில் தகராறு செய்த தம்பி வெட்டிக் கொலை; அண்ணன் கைது

தம்பி கொலை: அண்ணன் கைது
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


