முனைவா் எஸ். வைத்தியசுப்பிரமணியம்
தஞ்சாவூர்
மத்திய அரசின் பட்ஜெட்: விக்ஷித் பாரத் இயக்கத்தை நோக்கி இருக்கிறது! - முனைவா் எஸ். வைத்தியசுப்பிரமணியம்
மத்திய அரசின் பட்ஜெட் விக்ஷித் பாரத் 2047 இயக்கத்தை நோக்கி முன்னெடுத்துச் செல்லும் விதமாக இருக்கிறது என்றாா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் முனைவா் எஸ். வைத்தியசுப்பிரமணியம்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்தது:
மத்திய அரசின் பட்ஜெட் உயா் கல்வியில் பரந்த கவனம், திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் நல்வாழ்வை உள்ளடக்கிய ஆயுா்வேதம் முதல் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மற்றும் செமிகண்டக்டா் வரை பன்முகப்படுத்தப்பட்ட கற்பவா்களுக்கு ஒரு ஆதரவு சுற்றுச்சூழல் அமைப்பை வழங்குகிறது.
இதன் மூலம், விக்ஷித் பாரத் 2047 நோக்கி இந்தியாவின் அறிவுசாா் மற்றும் திறன் மூலதனத்தை வளப்படுத்த கல்வி, திறன், மன நல்வாழ்வு ஆகிய மூன்று குழல் இயந்திரமாக இந்த பட்ஜெட் மாற்றுகிறது.

