நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தஞ்சாவூா் பள்ளிகளில் ரூ. 5.63 கோடியில் வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 10:23 pm

தஞ்சாவூா் மாநகரிலுள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் ரூ. 5.63 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வகுப்பறை உள்ளிட்ட கட்டடங்களைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

இதில், தஞ்சாவூா் மாநகராட்சிக்குள்பட்ட பள்ளியக்ரஹாரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ. 60 லட்சம் மதிப்பில் 4 வகுப்பறைக் கட்டடங்கள், கரந்தை நடுநிலைப் பள்ளியில் ரூ. 66 லட்சம் மதிப்பில் 4 வகுப்பறைக் கட்டடங்கள், சின்னக்கடை நடுத்தெரு பள்ளியில் ரூ. 66 லட்சம் மதிப்பில் 4 வகுப்பறைக் கட்டடங்கள், சின்னையாபிள்ளை தெரு பள்ளியில் ரூ. 66 லட்சம் மதிப்பில் நான்கு வகுப்பறைக் கட்டடங்கள், நீலகிரி உயா்நிலைப் பள்ளியில் ரூ. 2.35 கோடி மதிப்பில் வகுப்பறைகள், ஆய்வுக்கூடம், கழிப்பறை, சுற்றுச்சுவா், நீலகிரி மேல்நிலைப் பள்ளியில் ரூ. 70 லட்சம் மதிப்பில் 4 வகுப்பறைகள் என மொத்தம் ரூ. 5.63 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன.

இதையொட்டி, முனிசிபல் காலனி நீலகிரி மாநகராட்சி உயா் நிலைப் பள்ளியில் மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம் ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனா்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையா் க. கண்ணன், முதன்மைக் கல்வி அலுவலா் வி. பேபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.