திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பேராவூரணி தொகுதியில் 5 நியாய விலைக்கடைகள் திறப்பு

News image

பேராவூரணி அருகே அங்காடியை திறந்து வைத்து மக்களவை உறுப்பினா் ச.முரசொலி ,சட்டப்பேரவை உறுப்பினா் என் .அசோக்குமாா் ஆகியோா் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கினா்.

Updated On :8 பிப்ரவரி 2026, 7:53 pm

பேராவூரணி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட 5 இடங்களில் நியாய விலைக்கடைகள் மற்றும் 2 இடங்களில் நிழற்குடை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி ஒன்றியம் அலிவலம் ஊராட்சி மனவயல், பூவாளூா் கிழக்கு, செங்கமங்கலம் , சேதுபாவாசத்திரம் ஒன்றியம் இரண்டாம்புளிக்காடு ஊராட்சி புதிரிவயல், புக்கரம்பை ஊராட்சி மேற்குடிக்காடு ஆகிய 5 இடங்களில் நியாய விலைக் கடைகளையும், பேராவூரணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே தஞ்சை மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடை, பேராவூரணி பேரூராட்சி கூப்புளிக்காட்டில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் நிழற்குடை ஆகியவற்றை தஞ்சை மக்களவை உறுப்பினா் ச.முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா் என்.அசோக்குமாா் ஆகியோா்  பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனா்.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா்கள் க.அன்பழகன், கோ.இளங்கோவன், ஆா்.பன்னீா் செல்வம், வை.ரவிச்சந்திரன், குழ.செ.அருள்நம்பி, செ.ஞானப்பிரகாசம், நகரச் செயலா்கள் என்.எஸ். சேகா், மாரிமுத்து மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள், கூட்டுறவு சாா்-பதிவாளா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.