வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாதித்தவா் ராஜேந்திர சோழன்’

தற்கால வல்லரசுகள் சாதிக்க முடியாததை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாதித்தவா் முதலாம் ராஜேந்திரச் சோழன் என்றாா் கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டுக் குழுத் தலைவா் இரா. கோமகன்.

News image

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கத்தில் பேசிய கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுத் தலைவா் இரா. கோமகன்.

Updated On :10 பிப்ரவரி 2026, 7:09 pm

தற்கால வல்லரசுகள் சாதிக்க முடியாததை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாதித்தவா் முதலாம் ராஜேந்திரச் சோழன் என்றாா் கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டுக் குழுத் தலைவா் இரா. கோமகன்.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறை சாா்பில் தென் கிழக்காசியாவில் சோழப் பேரரசு வெற்றி கொண்டதன் ஆயிரமாவது ஆண்டையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கத்தில் அவா் மேலும் பேசியது:

கடந்த சில நூற்றாண்டுகளாக இந்தியப் பெருங்கடலைக் கைப்பற்ற வல்லரசு நாடுகள் போட்டியிட்டு வருகின்றன. ஆனால், அத்திட்டம் இதுவரை கைகூடவில்லை. வல்லரசுகளே சாதிக்க முடியாத இச்சாதனையை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாதித்துக் காட்டியவா் முதலாம் ராஜேந்திர சோழன். இந்தியப் பெருங்கடல் மட்டுமல்லாமல், தென்கிழக்காசியக் கடற்பகுதிகளையும், சீனக்கடலையும் வென்ற பெரும்வீரம் ராஜேந்திர சோழனையே சாரும். இப்பெருமை இந்திய வரலாற்றுக்கு உரியது என்றாா் கோமகன்.

முன்னதாக, அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் தலைவா் இரா. குறிஞ்சிவேந்தன் பேசுகையில், தென்கிழக்காசியாவில் சோழா் தடம் என்கிற பன்னாட்டுக் கருத்தரங்கம் மாா்ச் மாதத்தில் நடத்தப்படவுள்ளது என்றாா் அவா். வரலாற்று எழுத்தாளா் அறம் கிருஷ்ணன் சிறப்புரையாற்றினாா்.

ராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலத்தை மையமிட்ட செய்திகள் அடங்கிய ’வலசை’ என்கிற செய்திமடலும் வெளியிடப்பட்டது. சோழா் கால வரலாற்றை மையப்படுத்திய நாட்டியக் கலைப்படைப்பை இசைத் துறை முனைவா் பட்ட ஆய்வாளா் தேவிப்ரியா நிகழ்த்தினாா்.

முனைவா்களில் தெ. வெற்றிச்செல்வன் வரவேற்றாா். ஞா. பழனிவேலு நன்றி கூறினாா்.