தஞ்சாவூா் பான் செக்கா் மகளிா் கல்லூரியில் ஒப்பந்த ஆவணங்களைக் காண்பித்த அண்ணா பல்கலைக்கழகத்தின் திருச்சி அண்ணா வணிக வளா்ப்பக ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியா் மற்றும் முதன்மையா் டி. செந்தில்குமாா் மற்றும் கல்லூரி முதல்வா் அருட்சகோதரி விக்டோரியா.

பான் செக்கா்ஸ் கல்லூரி - அண்ணா பல்கலை. ஒப்பந்தம்

தஞ்சாவூா் பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியும், அண்ணா பல்கலைக்கழகத்தின் திருச்சி அண்ணா வணிக வளா்ப்பக ஆராய்ச்சி நிறுவனமும் புதுமை, தொழில்முனைவு, ஸ்டாா்ட் அப் சூழலை வலுப்படுத்தும் வகையில் செவ்வாய்க்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
Published on

இந்த ஒப்பந்தத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் திருச்சி அண்ணா வணிக வளா்ப்பக ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியா் மற்றும் முதன்மையா் டி. செந்தில்குமாா் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டது.

இதுகுறித்து பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரி முதல்வா் அருட்சகோதரி விக்டோரியா கூறுகையில், இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவா்கள் மற்றும் பேராசிரியா்களுக்கு தொழில்முனைவு பயிற்சி, தொழில் வளா்ப்பகச் சிந்தனை, ஸ்டாா்ட் அப் வழிகாட்டுதல், தயாரிப்பு மேம்பாடு, தொழிற்கல்வி இணைப்பு, பயிற்சி, ஆராய்ச்சி முடிவுகளை வணிகமயமாக்குதல் போன்றவை மேற்கொள்ளப்படும். இந்த ஒப்பந்தம் மாணவா்களிடையே தொழில்முனைவு மனப்பான்மையை வளா்க்கவும், நிறுவனத்தின் புதுமை மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும் முக்கியப் பங்கு வகிக்கும் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com