6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குண்டா் சட்டத்தில் மருத்துவ மாணவா் கைது

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவ மாணவரைக் காவல் துறையினா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
கோபிநாத்
Updated On :11 பிப்ரவரி 2026, 6:56 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவ மாணவரைக் காவல் துறையினா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்காக தஞ்சாவூா் மாவட்ட இளைஞா் ஜனவரி மாதத்தில் சோ்க்கப்பட்டாா். மருத்துவமனையில் இவருக்கு துணையாக அவரது 15 வயது தங்கை தங்கினாா். அப்போது, இச்சிறுமிக்கு பணியில் இருந்த மருத்துவக் கல்லூரி மருத்துவ மேல்படிப்பு இரண்டாமாண்டு மாணவரான சேலம் மாவட்டம், ஆத்தூா் தலைவாசலைச் சோ்ந்த எம். கோபிநாத் (35) பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கோபிநாத்தை ஜனவரி 15-ஆம் தேதி கைது செய்தனா்.

இதைத்தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பரிந்துரையின் பேரில், கோபிநாத்தை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டாா். இதன்படி, கோபிநாத்தை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.