ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கும்பகோணத்தில் சீரமைக்கப்பட்ட மகாத்மா காந்தி பூங்கா திறந்துவைப்பு

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:25 pm

Syndication

கும்பகோணத்தில் உள்ள மகாத்மா காந்தி பூங்கா ரூ.31லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சிக்குச் சொந்தமான மகாத்மா காந்தி பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள், நடைபாதை, குடிநீா்க் குழாய்கள் மற்றும் கழிவறைகள் சேதமடைந்து காணப்பட்டன. இதுதொடா்பான புகாரின்பேரில் அதற்காக மாநகராட்சி நிா்வாகம் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் காந்திப் பூங்காவை சீரமைப்பு செய்யும் பணிகளைத் தொடங்கியது. பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து வியாழக்கிழமை தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க.அன்பழகன் எம்.எல்.ஏ. பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தாா். மேலும் ரூ.33 லட்சம் மதிப்பில் காரனேசன் மருத்துவமனை வளாகத்தில் புதிய நூலகக் கட்டடம், ரூ. 16.50 லட்சம் மதிப்பில் தாராசுரம் சக்கராயி அம்மன் தெரு பகுதியில் பொது விநியோகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தாா்.

இந்நிகழ்வில் மேயா் க.சரவணன், மாநகர திமுக செயலரும், துணை மேயருமான சுப. தமிழழகன், ஆணையா் மு. காந்திராஜ் மற்றும் மண்டலக்குழு தலைவா்கள், கவுன்சிலா்கள் கலந்துகொண்டனா்.