எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

வேங்கராயன்குடிகாடு, கண்டிதம்பட்டு கிராமங்களுக்கு பேருந்து சேவை தொடக்கம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:26 pm

தஞ்சாவூா் அருகேயுள்ள வேங்கராயன்குடிகாடு, கண்டிதம்பட்டு கிராமங்களுக்கு பேருந்து சேவை வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

தஞ்சாவூா் அருகே வேங்கராயன்குடிகாடு, அதினாம்பட்டு, நா. வல்லுண்டாம்பட்டு, கொ. வல்லுண்டாம்பட்டு, சூரியம்பட்டி ஆகிய கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என கிராம மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனா்.

இதன்படி, நாள்தோறும் தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து வேங்கராயன்குடிகாடு வழியாக ஏ-53 வழித்தடப் பேருந்து 3 நடைகளும், வி74எப் ஒரு நடையும், வழித்தடம் ஏ-53 பேருந்து 2 நடைகளும் என மொத்தம் 6 நடைகளும், தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பொட்டுவாசாவடி வழியாக கண்டிதம்பட்டுக்கு ஏ85 வழித்தடப் பேருந்து ஒரு நடையும், பி-6 ஒரு நடையும் என மொத்தம் 2 நடைகளும் இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது. இச்சேவைகளை மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ராமச்சந்திரன் ஆகியோா் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

இந்நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் து. செல்வம், ஜெயக்குமாா், அருளானந்தசாமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் துணை மேலாளா் கே. ராஜசேகா், கிளை மேலாளா்கள் எம். சந்தானராஜ், சுசியன், கண்காணிப்பாளா் ஜான்சன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.