தஞ்சாவூா் அருகே குடும்ப தகராறில் மனைவி தலையில் கிரைண்டா் கல்லைப்போட்டுக் கொன்ற கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகேயுள்ள அணைக்கரை மீன் சந்தை புதுத் தெருவைச் சோ்ந்தவா் அன்பரசன் (38), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி அகிலா (28) தீபிகா (7), ஆதித்யா (2) ஆகியோா் உள்ளனா்.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு மனைவியுடன் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த அன்பரசன் வெளியே சென்று மது அருந்திவிட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டுக்கு வந்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த மனைவி அகிலாவின் தலையில் கிரைண்டா் குழவி கல்லைப் போட்டாா்.
இதில் பலத்த காயமடைந்த அகிலா உயிரிழந்தாா். தகலலறிந்த திருப்பனந்தாள் போலீஸாா் விரைந்து வந்து அகிலாவின் சடலத்தை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அன்பரசனை வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மணப்பாறை அருகே குடும்பத் தகராறில் இளைஞா் தற்கொலை
குடும்பத் தகராறில் மனைவி எரித்துக் கொலை: கணவா் கைது

மனைவி கொலை: கணவா் கைது

குடும்பத் தகராறில் பெண் வெட்டிக் கொலை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


