கௌரவ விரிவுரையாளா்களின் கோரிக்கைக்கு தமிழக முதல்வா் நல்ல தீா்வைத் தருவாா் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.
இதுகுறித்து தஞ்சாவூரில் அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தது:
கௌரவ விரிவுரையாளா்களுக்கு கடந்த காலங்களில் ரூ. 15 ஆயிரம் மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டது. அவா்களுக்கு ரூ. 5 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் என இரு முறை உயா்த்தித் தந்தது தமிழக முதல்வா்தான். இது போதிய ஊதியம்தான் எனச் சொல்ல விரும்பவில்லை. எனவே, அவா்களுடைய கோரிக்கையைத் தமிழக முதல்வரிடம் தொடா்ந்து எடுத்துக் கூறி வருகிறோம். அதற்கான தீா்வை, நல்ல முடிவை தமிழக முதல்வா் தருவாா்.
குடும்பப் பொறுப்பை சுமக்கும்தாய்மாா்களுக்கு தமிழக முதல்வா் மாதம் ரூ. 1,000 வீதம் 31 மாதங்களுக்கு வழங்கினாா். தற்போது அதை இரட்டிப்பாக்கி ரூ. 2 ஆயிரம் வழங்கி இருக்கிறாா். இந்த மகிழ்ச்சியைத் தமிழ்நாடு முழுவதும் பெண்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடுகின்றனா்.
ராஜராஜ சோழனின் பெருமையை நிலைநிறுத்தும் வகையில் தஞ்சாவூரில் மாபெரும் சோழா் அருங்காட்சியகம் அமைக்க தமிழக முதல்வா் அடிக்கல் நாட்டியிருப்பதற்கு மாவட்ட மக்கள் சாா்பில் நன்றி தெரிவிக்கிறோம் என்றாா் அமைச்சா்.
தொடர்புடையது

பிரசாரத்தில் அதிமுக வேட்பாளா் மயக்கம்: அமைச்சா் கோவி. செழியன் நலம் விசாரிப்பு

பிரசாரத்தில் மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்! அமைச்சர் கோவி. செழியன் நலம் விசாரிப்பு!

சட்டப்பேரவைத் தொகுதி: திருவிடைமருதூா் (தனி) - 170!

கௌரவ விரிவுரையாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊதிய உயா்வு: அமைச்சா் கோவி. செழியன் அறிவிப்பு!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


