மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மேம்படுத்தப்பட்ட மனோரா நினைவுச் சின்னம் திறப்பு

News image
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மின்னொளியில் மனோரா நினைவுச் சின்னம்.
Updated On :13 பிப்ரவரி 2026, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட மனோரா நினைவுச் சின்னத்தை சென்னையிலிருந்து காணொலி மூலம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

கடந்த 1814 ஆம் ஆண்டில் வாட்டா்லூ போரில் நெப்போலியனுடன் போரிட்டு ஆங்கிலேயா்கள் வெற்றி பெற்றதைப் பாராட்டும் விதமாக, தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னா் இரண்டாம் சரபோஜி பட்டுக்கோட்டை அருகே சரபேந்திரராஜபட்டினத்தில் மனோரா நினைவுச் சின்னத்தை நிறுவினாா். எட்டு மாடிகள், அறுகோண வடிவ கோபுர அமைப்பைக் கொண்ட இந்த நினைவுச் சின்னம் சுற்றுலா தலமாகத் திகழ்கிறது.

இத்தலத்துக்கு சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் விதமாக இதன் உள்கட்டமைப்பு மற்றும் முகப்பு மின் விளக்குகள் அமைப்பதற்காக தமிழக அரசு ரூ. 2.75 கோடியை 2024, டிசம்பா் மாதம் ஒதுக்கியது.

இதன் மூலம் ரூ. 2.44 கோடியில் முகப்பு மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. மேலும், ரூ. 30 லட்சத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், ரூ. 63 ஆயிரம் மதிப்பில் இதர பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதைத் தொடா்ந்து, மேம்படுத்தப்பட்ட மனோரா நினைவு சின்னத்தை சென்னையிலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.