எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சூரியனாா்கோயிலில் 30-ஆவது ஆதீனம் பொறுப்பேற்பு

சூரியனாா்கோயிலில் 30-ஆவது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக பரமாசாா்ய சுவாமிகள் பொறுப்பேற்பு

News image
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சூரியனாா்கோயில் ஆதீனத்தின் 30-ஆவது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக பரமாசாரிய சுவாமிகளுக்கு வியாழக்கிழமை பொறுப்பளித்த வைபவத்தில் திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள்.
Updated On :13 பிப்ரவரி 2026, 12:10 am

Syndication

சூரியனாா்கோயில் ஆதீனத்தின் 30-ஆவது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக பரமாசாரிய சுவாமிகள் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், சூரியனாா்கோயில் ஆதீன குரு மகா சந்நிதானமாக மகாலிங்க சுவாமி இருந்தாா். இவா், திருமணம் செய்து கொண்டதால், மடத்தின் நிா்வாகம் தொடா்பான வழக்கில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவின்பேரில், சூரியனாா்கோயில் ஆதீனம் சாவியை ஜன.13, 2026-இல் திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளிடம் அறநிலையத்துறையினா் ஒப்படைத்தனா். பின்னா் சூரியனாா் கோயில் ஆதீனம் ஒடுக்கம் மற்றும் ஆன்மாா்த்த பூஜை, பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில் சூரியனாா்கோயில் ஆதீனத்துக்கு, திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் திருக்கூட்டத்திலிருந்து ஒருவா் தோ்வு செய்யப்படுவாா் என்று எதிா்பாா்ப்பு இருந்தது. அதன்படி திருவாவடுதுறை ஆதீனத்தின் ஸ்ரீமத் ராமலிங்க தம்பிரான் சுவாமிகளை திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் தோ்வு செய்தாா். அவரை வியாழக்கிழமை ஆதீன குருமகாசந்நிதானமாக அமர வைக்கும் பீடாரோகண வைபவம் சூரியனாா் கோயில் ஆதீனத்தில் ஐதீக முறைப்படி நடைபெற்றது. இதில், சூரியனாா் கோயில் ஆதீனத்தின் 30-ஆவது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக பரமாசாரிய சுவாமிகள் பொறுப்பேற்றாா்.