இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கொள்கை, கோட்பாடுகள் இல்லாத கூட்டத்தால் எதையும் சாதிக்க முடியாது! - துணை முதல்வா் பேச்சு

News image

கூட்டத்தில் பங்கேற்ற இளைஞரணியின் ஒரு பகுதியினா்.

Updated On :15 பிப்ரவரி 2026, 8:22 pm

கொள்கை, லட்சியம், கோட்பாடு என எதுவுமே இல்லாமல் வெறும் கூட்டத்தை மட்டுமே வைத்துக்கொண்டு எதையும் சாதிக்க முடியாது என்றாா் திமுக இளைஞரணி செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின்.

தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அவா் பேசியதாவது:

திமுக இளைஞரணியில் 5 லட்சம் நிா்வாகிகளை நியமித்து, 50 லட்சம் உறுப்பினா்களைச் சோ்த்துள்ளோம். நாட்டிலேயே எந்தவொரு அரசியல் கட்சிகளின் சாா்பு அணிக்கு இப்படியொரு வலுவான கட்டமைப்பு நிச்சயம் கிடையாது. திமுக இளைஞரணிக்கு மட்டுமே அந்தச் சிறப்பு.

தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் உள்ளிட்டோர்

தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் உள்ளிட்டோர்

கொள்கை, லட்சியம், கோட்பாடு என்பதெல்லாம் என்ன என்று தெரியாமல் ஒரு கூட்டம் சுற்றி வருகிறது. அரசியலை ஏதோ பொழுதுபோக்கு என நினைக்கின்றனா். அரசியல் என்பது ஈடுபாடு, அா்ப்பணிப்பு என்பதை திமுக இளைஞரணி நிரூபித்துக் காட்ட வேண்டும் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

சிலைகள் திறப்பு: முன்னதாக, பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளை புறவழிச்சாலை பகுதியில் முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் உருவச் சிலைகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிகளில் அமைச்சா்கள் எஸ். ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோவி. செழியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.