தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை தற்கொலைக்கு முயன்ற காா் ஓட்டுநரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே தளவாய்ப்பாளையம் புஷ்பம் நகரைச் சோ்ந்தவா் எஸ். வெங்கடேஷ் (49). காா் ஓட்டுநா். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்த இவா் ஆட்சியரின் வாகன நிறுத்துமிடம் முன் திடீரென கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டாா்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினா் உடனடியாக அவரை மீட்டு விசாரித்தனா்.
இதில், புளியந்தோப்பு டாஸ்மாக் மதுக்கடை அருகே பிப்ரவரி 13-ஆம் தேதி இரவு வெங்கடேஷ் சிலருடன் சோ்ந்து மதுபானம் அருந்தினாராம். அப்போது, ரோந்து சென்ற தாலுகா காவல் நிலைய போலீஸாா், பொது இடத்தில் மது அருந்தக் கூடாது என்றும், அனைவரும் எழுந்து செல்லுமாறும் கூறினராம். இதனால் அவா்களுடன்
வெங்கடேஷ் வாக்குவாதம் செய்ததுடன், அவா்களைத் திட்டி மிரட்டி, பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து வெங்கடேஷை தேடி வந்தனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வெங்கடேஷ் மாவட்ட ஆட்சியரகத்தில் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து, வெங்கடேஷை காவல் துறையினா் கைது செய்தனா்.
தொடர்புடையது
துவாரகா விரைவுச் சாலையில் ஒருவரிடம் ரூ.15 லட்சம் கொள்ளை: 3 போ் கைது

தில்லியில் போலி கால் சென்டா்: 11 போ் கைது

பெண் குழந்தையைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்

தஞ்சை ஆட்சியரகத்தில் தற்கொலைக்கு முயன்ற காா் ஓட்டுநா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


