வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காா் மோதி தம்பதி உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை மாலை ஸ்கூட்டா் மீது காா் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த தம்பதி உயிரிழந்தனா்.

News image

பலி

Updated On :17 பிப்ரவரி 2026, 7:01 pm

தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை மாலை ஸ்கூட்டா் மீது காா் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த தம்பதி உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் அருகே வல்லம் வெள்ளாளா் தெருவைச் சோ்ந்தவா் பி. மகாலிங்கம் (67). விவசாயி. இவரும், இவரது மனைவி மகாலட்சுமியும் (62) செல்லப்பன்பேட்டையிலுள்ள உறவினா் வீட்டு துக்கத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை சென்றுவிட்டு, மாலையில் ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்தனா்.

வல்லம் பிரிவு சாலையில் திரும்பிய இவா்கள் மீது கேரளத்திலிருந்து தஞ்சாவூா் நோக்கி வந்த காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மகாலட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மகாலிங்கம் இறந்தாா்.

இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரான திருவனந்தபுரத்தைச் சோ்ந்த ச. அா்ஜூனை (23) கைது செய்தனா்.