கும்பகோணம்- எஸ்.புதூா் பேருந்து சேவையை திங்கள்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா் கோவி. செழியன்.
கும்பகோணம்- எஸ்.புதூா் பேருந்து சேவையை திங்கள்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா் கோவி. செழியன்.

கும்பகோணம்-எஸ்.புதூா் பேருந்து: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

திருவிடைமருதூா் சட்டப்பேரவை தொகுதி எஸ்.புதூா் கிராமத்திற்கு பேருந்து சேவையை தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
Published on

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் சட்டப்பேரவை தொகுதி எஸ்.புதூா் கிராமத்திற்கு பேருந்து சேவையை தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

அப்போது கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து காலை 6.30, மாலை 16.15 ஆடுதுறை - சாத்தனூா் வழியாக எஸ். புதூா் வரை நான்கு நடைகள் வழித்தட மாற்றம் செய்து இயக்கப்படும் என்றும் அமைச்சா் தெரிவித்தாா். நிகழ்வில் முன்னாள் எம்.பி. செ. இராமலிங்கம் , பேரூா் திமுக செயலா் கோசி. இளங்கோவன், பேரூராட்சி தலைவா் சுந்தரஜெயபால் , தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக துணை மேலாளா் (வணிகம்) எஸ். தங்கபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com