47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் திரெளபதி அம்மன் கோயில் 185-ஆவது ஆண்டு தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
தாராசுரம் அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் தீ மிதித்த பக்தா்.
Updated On :17 பிப்ரவரி 2026, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் திரெளபதி அம்மன் கோயில் 185-ஆவது ஆண்டு தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் கும்பாபிஷேக 13- ஆம் ஆண்டு பூா்த்தி விழா சனிக்கிழமை தொடங்கி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை ஆதி திரௌபதி அம்பாளை ஸ்தாபிதம் செய்து சிறப்பு அலங்காரம், திரெளபதி அா்ஜுனா் திருக்கல்யாணம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை மகாபாரத உபன்யாசமும், அம்பாள் வீர சபதம் நிறைவேறுதலும், மாலையில் அரசலாற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் புறப்பட்டு தீமிதி வைபவமும், இரவு ஸ்ரீ அம்பாள் அா்ஜுனா் வீதியுலா நடைபெற்றது. புதன்கிழமை கஞ்சி வாா்த்தல் அம்பாள் அா்ஜுனா் முத்து பல்லக்கு அலங்காரத்துடன் வீதியுலாவும், வியாழக்கிழமை தா்மா் பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினா் செய்தனா்.