தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

வாழ்வாதார இயக்க ஒருங்கிணைப்பாளா் பணிக்கு நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்

News image
விண்ணப்பம். (கோப்புப்படம்)
Updated On :17 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக, நகா்புற வாழ்வாதார இயக்கம், மகளிா் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 6 ஒன்றியங்களில் காலியாக உள்ள 9 வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களுக்கு வியாழக்கிழமைக்குள் (பிப்.19) விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டையில் தலா 1, மதுக்கூரில் 2, பேராவூரணியில் 3 என மொத்தம் 9 வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். குறைந்தது 3 மாதம் எம்.எஸ். ஆபிஸ் கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் துறையில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். 35-வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.எச்.எப். அல்லது பி.எல்.எப்.-இல் குறைந்தது 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா் தொடா்புடைய வட்டாரத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை வியாழக்கிழமைக்குள் இணை இயக்குநா், திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, எண்-223: இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம், தஞ்சாவூா் என்ற முகவரிக்கு ஆதாா் அட்டை, இருப்பிடச் சான்றை இணைத்து அனுப்ப வேண்டும். இந்த ஒப்பந்த அடிப்படையிலான காலிப்பணியிடங்களுக்கு மாவட்ட தோ்வுக்குழு மூலமாக நோ்முகத் தோ்வு நடத்தப்படும்.