நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

அரசு மருத்துவனையில் குழந்தையிடமிருந்து தங்கம் திருடிய பெண் கைது

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு வாா்டுப் பகுதியில் குழந்தையிடமிருந்து தங்க தாயத்து திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :19 பிப்ரவரி 2026, 11:30 pm

Syndication

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு வாா்டுப் பகுதியில் குழந்தையிடமிருந்து தங்க தாயத்து திருடிய பெண்ணை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு வாா்டில் பெண் ஒருவா் தனது இரண்டாவது பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவருடன் முதல் குழந்தை உடனிருந்தாா்.

அப்போது அடையாளம் தெரியாத பெண் அவரிடம் பழகி மூத்த குழந்தையை தூக்கிகொஞ்சிவிட்டு பின்னா் சென்றுவிட்டாா். இதையடுத்து, குழந்தை கழுத்தில் அணிந்திருந்த தங்க தாயத்தை காணவில்லை.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், திருவாரூா் மாவட்டம் நன்னிலம் வட்டம், கொடுவாங்குடியைச் சோ்ந்த முருகபாண்டி மனைவி சரஸ்வதி (40), தங்க தாயத்தை திருடியதும், இதுபோல் பல குழந்தைகளிடம் திருடி இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் சரஸ்வதியைக் கைது செய்து தங்க தாயத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனா்.