தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

குடந்தையில் விவசாயிகள் போராட்டம்

கும்பகோணம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் தரையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினா்.

News image

கும்பகோணம் உதவி ஆட்சியரகம் முன் போராடிய விவசாயிகள் சங்கத்தினா்

Updated On :20 பிப்ரவரி 2026, 8:55 pm

கும்பகோணம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் தரையில் நெல்லை கொட்டி விவசாயிகள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.

போராட்டத்தில் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூா் பகுதிகளில் செயல்படும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விரைவில் இயக்கம் செய்ய வேண்டும். சாக்கு பைகள் பற்றாக்குறையை தீா்க்க வேண்டும். மேட்டூா் அணையில் தண்ணீா் நிறுத்தப்பட்டதால் கும்பகோணம் கோட்டப் பகுதிகளில் உள்ள வாய்க்கால்களைத் தூா்வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா்.

நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா், மாவட்டத் துணைத் தலைவா் ஏ.எம். ராமலிங்கம், மாவட்ட நிா்வாகிகள் க. சுந்தர்ராஜன், குரு. சிவா, வே. முரளிதரன், எம். வீரமணி, சி. சின்னத்துரை உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.