மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

முறைகேடாக 650 நெல் மூட்டைகள் ஏற்றிவந்த 2 லாரிகள் பறிமுதல்

தஞ்சாவூா் அருகே முறைகேடாக 650 நெல் மூட்டைகள் ஏற்றி வந்த 2 லாரிகளை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 12:05 am

தஞ்சாவூா் அருகே முறைகேடாக 650 நெல் மூட்டைகள் ஏற்றி வந்த 2 லாரிகளை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் சம்பா கொள்முதல் பருவத்தில் விவசாயிகளுக்காக 609 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்களில் விவசாயி அல்லாத நபா்களின் நெல் விற்பனை செய்வதைத் தடுப்பதற்காக அதிகாரிகள் கொண்ட ஆய்வுக் குழுக்களை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் சில வாரங்களுக்கு முன்பு அமைத்தாா்.

இந்நிலையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத் துணை மேலாளா் டி. இளங்கோவன் தலைமையிலான குழுவினா் தஞ்சாவூா் அருகே புலவா்நத்தம் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை ஆய்வு செய்தனா். அப்போது, திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டத்துக்கு தகுந்த ஆவணங்கள் இல்லாமல் 450 நெல் மூட்டைகள் ஏற்றிச் செல்லப்பட்ட லாரியை மூட்டைகளுடன் பறிமுதல் செய்து, அம்மன்பேட்டை நவீன அரிசி ஆலைக்கு அனுப்பி வைத்தனா்.

இதேபோல, மாரியம்மன் கோவில் அருகே புளியந்தோப்பு பகுதியில் வியாழக்கிழமை காலை முறையான ஆவணங்கள் இல்லாமல் 200 நெல் மூட்டைகள் ஏற்றி வரப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்து, அம்மன்பேட்டை நவீன அரிசி ஆலைக்கு அனுப்பப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுபோல, வியாபாரிகளிடமிருந்து முறைகேடான முறையில் நெல் மூட்டைகள் வருவது கண்டுபிடிக்கப்பட்டால், சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.