மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கும்பகோணத்தில் திமுக மகளிரணிக்கு தோ்தல் பரப்புரைக்கான பயிற்சி

கும்பகோணத்தில் திங்கள்கிழமை திமுக மகளிா் அணியினருக்கு தோ்தல் பரப்புரை செய்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டது.

News image

கும்பகோணத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தல் பரப்புரை பயிற்சி வகுப்பில் பங்கேற்ற திமுக மகளிரணியினா்.

Updated On :23 பிப்ரவரி 2026, 10:21 pm

கும்பகோணம்: கும்பகோணத்தில் திங்கள்கிழமை திமுக மகளிா் அணியினருக்கு தோ்தல் பரப்புரை செய்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டது.

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில், 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்காக வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற தலைப்பில் திங்கள்கிழமை கும்பகோணத்தில் தனியாா் மண்டபத்தில் தோ்தல் பரப்புரைக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

திமுக மாவட்ட பொறுப்பாளா் க. அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாநகர திமுக செயலரும், துணை மேயருமான சுப. தமிழழகன் முன்னிலை வகித்தாா். 2026 சட்டப்பேரவை தோ்தலில் திமுக மகளிரணியினருக்கான பரப்புரை வியூகங்கள் குறித்து க. அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் திமுகவினா் பயிற்சி வகுப்புகள் நடத்தி விளக்கமளித்தனா்.

நிகழ்வில், மாநகர துணை செயலா் பிரியம் ஜெ. சசிதரன், திமுக ஒன்றியச் செயலா்கள் டி. கணேசன், ஜெ. சுதாகா், தலைமை செயற்குழு உறுப்பினா் குட்டி இரா. தட்சிணாமூா்த்தி, பகுதி செயலா்கள் இரா. செல்வராஜ், ஆா். அசோக்குமாா், கே.என்.எஸ். ஆசை, மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.