கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தேசிய தடகளப் போட்டியில் வென்ற செவித்திறன் குறைபாடுடையோருக்கு பாராட்டு

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான செவித்திறன் குறைபாடுடையோருக்கான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற

News image
- தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தேசிய தடகளப் போட்டியில் வென்ற செவித்திறன் குறைபாடுடைய மாணவ, மாணவிகளை திங்கள்கிழமை பாராட்டிய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.
Updated On :23 பிப்ரவரி 2026, 10:19 pm

Syndication

தஞ்சாவூா்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான செவித்திறன் குறைபாடுடையோருக்கான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற கும்பகோணம் சாக்கோட்டை மாதா செவித்திறன் குறைபாடுடையோருக்கான மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் திங்கள்கிழமை பாராட்டினாா்.

திருவனந்தபுரத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான செவித்திறன் குறைபாடுடையோருக்கான தடகளப் போட்டியில் கும்பகோணம் சாக்கோட்டை மாதா செவித்திறன் குறைபாடுடையோருக்கான மேல்நிலைப் பள்ளி மாணவா்களான ரா. சங்கரய்யா நீளம் தாண்டுதலில் முதல் பரிசும், சி. சிவா ஈட்டி எறிதலில் முதல் பரிசும், மாணவி சே. பாா்கவி ஈட்டி எறிதலில் முதல் பரிசும் வென்றனா்.

மாணவிகள் இ. இனியதா்ஷினி வட்டு எறிதலில் இரண்டாம் பரிசும், குண்டு எறிதலில் மூன்றாம் பரிசும், ந. விசாலம் நீளம் தாண்டுதலில் முதல் பரிசும், மாணவா் தெ. சக்தி 2 ஆயிரம் மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் முதல்பரிசும் பெற்றனா்.

இவா்களை சென்னையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிப்ரவரி 18 ஆம் தேதி பரிசுத் தொகை வழங்கி பாராட்டினாா். இதையடுத்து, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பரிசுகள், காசோலைகளை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜத்திடம் திங்கள்கிழமை காண்பித்தனா். இவா்களை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் ஆட்சியா் பொன்னாடை அணிவித்து பாராட்டினாா்.

அப்போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எஸ். உலகநாதன், மாதா செவிதிறன் குறைபாடுடையோருக்கான சிறப்புப் பள்ளி தாளாளா் மரியசெல்வம், தலைமையாசிரியா் ஜோதிமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.