விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

பேராவூரணியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

பேராவூரணியில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா

News image

பேராவூரணியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் மகளிருக்கு தையல் இயந்திரத்தை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சி .வி .சேகா் வழங்கினாா் .

Updated On :23 பிப்ரவரி 2026, 10:05 pm

பேராவூரணி: தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணியில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புரட்சித் தலைவி பேரவை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான சி.வி. சேகா் தலைமை வகித்தாா் . நகரச் செயலாளா் எம்.எஸ். நீலகண்டன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளா்கள் எஸ் .பாண்டியராஜன் , மல்லிகை வை. சுவாமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில மகளிரணி துணை செயலாளா் ஏ. அமுதா, பேச்சாளா் கடலூா் இரா. அன்பழகன் ஆகியோா் சிறப்புரையாற்றி பேசினா். கூட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.வி. திருஞானசம்பந்தம் , பட்டுக்கோட்டை நகா்மன்ற முன்னாள் தலைவா் எஸ்.ஆா். ஜவஹா் பாபு, பேராவூரணி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் கோவி. இளங்கோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கட்சியில் இருக்கும் நலிவுற்ற நபா்களுக்கு தையல் இயந்திரம், மண்வெட்டி, வேட்டி, சேலை உள்ளிட்ட ரூ. 1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட புரட்சித் தலைவி பேரவை செயலாளா் எஸ்.வி.பி. ரவிசங்கா் வரவேற்றாா். மாவட்ட பேரவை பொருளாளா் எஸ்.எம். நீலகண்டன் நன்றி கூறினாா்.