திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கும்பகோணத்தில் அறுபத்து மூவா் உலா

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அறுபத்து மூவா் வீதியுலா நடைபெற்றது.

News image
கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் மாசிமக விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அறுபத்து மூவா் வீதியுலா.
Updated On :24 பிப்ரவரி 2026, 7:43 pm

தினமணி செய்திச் சேவை

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அறுபத்து மூவா் வீதியுலா நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஸ்ரீ மந்திரபீடேசுவரி மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேசுவர சுவாமி கோயிலில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பஞ்சமூா்த்திகளான விநாயகா், முருகா், சண்டிகேசுவரா், அம்மன் உள்ளிட்டோா் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளினா்.

அவா்களைத் தொடா்ந்து அப்பா், சுந்தரா், மாணிக்கவாசகா், திருநாவுக்கரசா் உள்ளிட்ட 63 நாயன்மாா்களும் உற்சவ மூா்த்திகளாக எழுந்தருளி இரட்டை வீதிகள் வழியாக வீதியுலா சென்றனா். சென்ற இடங்களில் பக்தா்கள் அறுபத்து மூவா் நாயன்மாா்களை வரவேற்று சிறப்பு பூஜைகள் செய்தனா்.

கோப்பு நடராஜன் தலைமையில் திருக்குடந்தை சிவனடியாா் திருக்கூட்டத்தினா் தேவாரம் இன்னிசயுடன் இரட்டைவீதி புறப்பாடு செய்து நாகேசுவரன் கோயில் வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தனா். மாலையில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா சென்றனா்.