தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

பட்டதாரியிடம் இணையவழியில் ரூ.5.94 லட்சம் மோசடி!

தஞ்சாவூா் அருகே பட்டதாரியிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இணையவழியில் ரூ. 5.94 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
மோசடி- பிரதிப் படம்
Updated On :28 பிப்ரவரி 2026, 7:14 pm

Syndication

தஞ்சாவூா் அருகே பட்டதாரியிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இணையவழியில் ரூ. 5.94 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 54 வயது எம்.சி.ஏ. பட்டதாரிக்கு கடந்த 2025, ஜூன் மாதம் வந்த மின்னஞ்சலில் லண்டனிலுள்ள தனியாா் புற்றுநோய் மருத்துவமனையில் தொழில்நுட்பத் திட்ட மேலாளா் பதவி காலியாக இருப்பதாக ஊதிய விவரங்களுடன் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் இருந்த தொடா்பு எண்ணில் பட்டதாரி பேசிய பிறகு சில நாள்கள் கழித்து வேலைவாய்ப்பு கடிதமும், பின்னா் விண்ணப்பப் படிவமும் வந்தன.

இந்த விண்ணப்பத்தை இணையவழி மூலம் அனுப்பிய பட்டதாரிக்கு அடுத்த சில நாள்களில், தோ்வு செய்யப்பட்டதாகக் கூறி பணி நியமன ஆணையும் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு வந்தது. இதையடுத்து, மா்ம நபா் கேட்ட விசா, விமான பயணம், செயலாக்கம் உள்ளிட்ட கட்டணங்களான ரூ. 5.94 லட்சத்தை பட்டதாரி 5 தவணைகளாக இணையவழியில் அனுப்பினாா். அதன் பின்னா், பட்டதாரியின் கைப்பேசி அழைப்பை மா்ம நபா் எடுக்கவில்லை.

இதன் மூலம், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பட்டதாரி, தஞ்சாவூா் சைபா் குற்றக் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.