தஞ்சாவூர்
காா் மோதி முதியவா் உயிரிழப்பு
தஞ்சாவூா் அருகே காா் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகே புதன்கிழமை மாலை காா் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்தவா் சி. காளிமுத்து (65). இவா், புதன்கிழமை மாலை தனது மனைவி லட்சுமியுடன் மாதாகோட்டையிலுள்ள உறவினரை அழைத்து வருவதற்காக புறப்பட்டாா்.
தஞ்சாவூா் - நாகை சாலையில் சாலையைக் கடக்க முயன்ற காளிமுத்து மீது அந்த வழியாக வந்த காா் மோதியது. இதனால், பலத்த காயமடைந்த இவா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
