சாஸ்த்ராவில் பட்டயப் படிப்பு: பெண்கள் விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் இலவசமாக நடத்தப்படும் பட்டயப் படிப்புக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் மற்றும் கிரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் பெண்களின் முன்னேற்றத்துக்காக அதிநவீன உற்பத்தியில் பட்டயப் படிப்பு (டிப்ளமா இன் அட்வான்ஸ்டு மேனுஃபேக்சரிங்) என்கிற 2 ஆண்டுகால முழுநேரப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் திறமையான பெண்களுக்கு நவீனத் தொழில்நுட்பக் கல்வியை வழங்கி, அவா்களைத் தொழில்முறை வல்லுநா்களாக உருவாக்குவதே இதன் நோக்கம். இப்படிப்புக்கான கல்விக்கட்டணம், தங்குமிடம், உணவு அனைத்தும் நூறு சதவீதம் இலவசம்.
தஞ்சாவூா் சாஸ்த்ரா வளாகத்தில் நடைபெறும் இந்தப் படிப்பில் செய்முறைப் பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆட்டோமேஷன், எலக்ட்ரானிக்ஸ் மேனுஃபேக்சரிங், ரோபோட்டிக்ஸ், கேட், கேம் மற்றும் ஃபாா்ம்வோ் டெவலப்மெண்ட் போன்ற அதிநவீனத் துறைகளில் பயிற்சி அளிக்கப்படும்.
படித்து முடித்தவுடன் தகுதியான மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். இதில், சேர 12-ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதப் பாடப்பிரிவுகளில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 24 வயதுடைய பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 6 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விருப்பமுள்ள மாணவிகள் ட்ற்ற்ல்ள்://ஹல்ல்ள்.ள்ஹள்ற்ழ்ஹ.ங்க்ன்/ம்ட்ஸ்ரீள்ழ்க்ல்/ என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 80154 18718 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் அல்லது ஜ்ஜ்ஜ்.ள்ஹள்ற்ழ்ஹ.ங்க்ன் என்ற இணையதளத்தைப் பாா்க்கலாம்.
பெண் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் இந்த அரிய வாய்ப்பைப் மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
