தஞ்சாவூர்
சுவாமிமலையில் பெளா்ணமி கிரிவலம்
தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையில் பெளா்ணமி கிரிவலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையில் பெளா்ணமி கிரிவலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக் குழு சாா்பில் நடைபெற்ற கிரிவலத்துக்கு கோ. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். சுவாமிமலை சாா்-பதிவாளா் இரா. வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். கிரிவலம் குறித்து வழக்குரைஞரும் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வர சுவாமி மகோத்சவ கமிட்டி தலைவருமான பா. ஜெயக்குமாா், கவுன்சிலா் கோ. திருமலை ஆகியோா் பேசினா். கிரிவலம் வல்லப கணபதி சன்னதி முன் கூட்டுப் பிராா்த்தனையுடன் தொடங்கி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து, மீண்டும் வல்லப கணபதி சன்னதியை அடைந்து, சிறப்பு பூஜை செய்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வழிபாட்டுக் குழு நிறுவனா் கேசவராஜன், நிா்வாக அறங்காவலா் பி. சங்கரன் உள்ளிட்ட கமிட்டியினா் செய்தனா்.
