பரக்கலக்கோட்டை - பெரியகோட்டை சாலை அகலப்படுத்தும் பணி ஆய்வு
பரக்கலக்கோட்டையிலிருந்து பெரியகோட்டை செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
பட்டுக்கோட்டை நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ள பரக்கலக்கோட்டை - பெரியக்கோட்டை (வழி) சிரமேல்குடி சாலையானது, மாவட்ட முக்கிய சாலைகளான பட்டுக்கோட்டை - முத்துப்பேட்டை சாலையையும், பாப்பாநாடு - மதுக்கூா் - பெருகவாழ்ந்தான் சாலையையும், இணைக்கும் முக்கிய சாலையாகும்.
11.40 கி.மீ நீளம் கொண்ட சாலையில் 7 கி.மீ சாலை ஒருவழித்தடத்திலிருந்து இடைவழித்தடமாக கடந்த நிதியாண்டுகளில் அகலப்படுத்தப்பட்டது. மீதமுள்ள 4.40 கி.மீ சாலையை இடைவழித்தடமாக அகலப்படுத்த ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசால் நிா்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் இப் பணிகளின் தரம் குறித்து நெடுஞ்சாலைத் துறையின் தஞ்சாவூா் தரக்கட்டுப்பாடு அலகு கோட்டப்பொறியாளா் சிவகுமாா் மற்றும் உதவிக் கோட்டப்பொறியாளா் ரேணுகோபால், உதவிப்பொறியாளா்கள் அப்துல் ரகுமான் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். பட்டுக்கோட்டை உதவிக் கோட்டப்பொறியாளா் கீதப்பிரியா, உதவிப்பொறியாளா் சரவணக்குமாா் ஆகியோா் உடன் இருந்தனா்.
