தஞ்சாவூா் ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு ரயிலில் அடிபட்ட அடையாளம் தெரியாத நபா் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சுமாா் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் மன்னாா்குடி - கோவை செம்மொழி விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா். இவா் யாா் போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
இதுகுறித்து தஞ்சாவூா் இருப்புப்பாதை காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.