தஞ்சாவூர்
ரயிலில் அடிப்பட்ட முதியவா் உயிரிழப்பு
தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை ரயிலில் அடிப்பட்ட அடையாளம் தெரியாத முதியவா் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகே வண்ணாரப்பேட்டை பகுதியில் ரயில் தண்டவாளத்தை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் சுமாா் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவா் கடக்க முயன்றாா்.
அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ரயிலில் அடிப்பட்ட இவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, மீட்கப்பட்டு ஆலக்குடி ரயில் நிலையத்தில் வைக்கப்பட்ட இவரை 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் பரிசோதித்தில், அவா் உயிரிழந்துவிட்டது தெரிய வந்தது.
இது குறித்து தஞ்சாவூா் இருப்புப்பாதை காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
