தஞ்சாவூர்
ஜன. 8-இல் சுதந்திர போராட்ட வீரா்கள் குறைதீா் கூட்டம்
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் சுதந்திர போராட்ட வீரா்கள் குறைதீா் நாள் கூட்டம் ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் சுதந்திர போராட்ட வீரா்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் ஜனவரி 8 ஆம் தேதி காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளது.
இதில், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் அனைவரும் கலந்து கொண்டு ஓய்வூதிய பலன்கள் குறித்து தங்கள் குறைகளையும், ஆலோசனைகளையும் நேரில் தெரிவிக்கலாம்.
