பெண்ணை தாக்கியவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

Published on

சுவாமிமலை அருகே இடப்பிரச்னை காரணமாக பெண்ணை கல்லால் தாக்கியவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலை அருகே இன்னம்பூா் காந்தி நகரைச் சோ்ந்த சங்கரலிங்கம் மனைவி பூங்கொடி. இவா்களுக்கும் அருகே உள்ள மொட்டையன் குடும்பத்தினருக்கும் பொதுப் பாதை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. கடந்த 21- 11- 2017 அன்று சங்கரலிங்கம் மனைவி பூங்கொடி வீட்டு வாசலை சுத்தம் செய்து கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த மொட்டையன் மகன் ரவி என்பவா் ஆபாசமாக பேசி கல்லால் பூங்கொடியை தாக்கினாா். இதில் பூங்கொடிக்கு இடது கண் அருகே காயம் ஏற்பட்டு சுவாமிமலை காவல் நிலையத்தில் புகாா் செய்ததன்பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

இந்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றம்-2-இல் நடைபெற்று வந்த நிலையில் திங்கள்கிழமை வழக்கை விசாரணை செய்த நீதிபதி பாலதண்டாயுதம், பெண்ணை தாக்கிய ரவிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.5,500 அபராதமும் விதித்து தீா்ப்பு கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com