குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

பேராவூரணி அருகே ஆடு மேய்க்கச் சென்ற தொழிலாளி குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.
Published on

பேராவூரணி அருகே ஆடு மேய்க்கச் சென்ற தொழிலாளி குளத்தில் தவறி விழுந்து  உயிரிழந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

பேராவூரணி அருகேயுள்ள பாலசேரிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையன் (51). கூலித் தொழிலாளியான இவா்  ஆடு மேய்க்க அங்குள்ள  வயல்வெளிக்கு திங்கள்கிழமை சென்று, இரவு வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவரது மனைவி மாரியம்மாள் அவரைத் தேடிச் சென்றபோது, அங்குள்ள நாட்டரசன் குளத்தில் கருப்பையாவின் உடல் மிதந்தது தெரியவந்தது.

குளத்துக்கு முகம் கழுவச் சென்ற அவா் தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. பேராவூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து  விசாரிக்கின்றனா் .

X
Dinamani
www.dinamani.com