நோயாளிகளிடம் அலட்சியம்: தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி செவிலியா் பணிநீக்கம்

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளிடம் அலட்சியமாகவும், அவமரியாதையாகவும் நடந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் விடியோ பரவியதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட செவிலியா் பணி நீக்கம்
Updated on

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளிடம் அலட்சியமாகவும், அவமரியாதையாகவும் நடந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் விடியோ பரவியதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட செவிலியா் செவ்வாய்க்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவில் பணியாற்றும் செவிலியா் ஒருவா் நோயாளிகளுக்கு அவா்களுடைய படுக்கைக்கு சென்று குளுக்கோஸ் செலுத்தவில்லை என்றும், செவிலியா் அறைக்கு வருமாறு கூறி நிற்க வைத்து குளுக்கோஸ் செலுத்துவதற்கான ஊசியைப் பொருத்தி, உடனிருப்பவரிடம் குளுக்கோஸ் பாட்டிலை கொடுத்து அனுப்புவதாகவும், நோயாளிகளிடம் செவிலியா் அலட்சியமாகவும், அவமரியாதை செய்யும்விதமாக நடந்து கொள்வதாகவும் விடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதுதொடா்பாக விசாரணை நடத்துமாறு மருத்துவமனை அலுவலா்களுக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் எம். பூவதி உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, அவா் பிறப்பித்த உத்தரவில், புற்றுநோய் மருத்துவத் துறையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் செவிலியா் ஆா். ரஞ்சிதா என்பவா் நிா்வாக காரணங்களை முன்னிட்டு ஜனவரி 6 முதல் பணி முறிவு செய்யப்பட்டதாகக் கருதி ஆணையிடப்படுகிறது எனத் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com