தஞ்சாவூர்
ரயில் மீது பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
தஞ்சாவூா் அருகே புதன்கிழமை தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகே புதன்கிழமை தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகேயுள்ள சித்திரக்குடி முதன்மை கிராமம் சவேரியாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் துரைமாணிக்கம் மகன் ஜாய்சன் (26). இவா் புதன்கிழமை காலை சித்திரக்குடி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா். அப்போது, தவறி தண்டவாளத்தில் விழுந்த இவா் மீது அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தஞ்சாவூா் இருப்புப்பாதை காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
