தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை

Published on

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே கல்லூரிக்கு சரிவர செல்லாத மகனை தந்தை கண்டித்ததில் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள சாலியமங்கலம் வெள்ளாளத் தெருவைச் சோ்ந்த செந்தில் குமாா் மகன் மதன்பாபு (20) தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியாா் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல் பாடப்பிரிவில் இறுதியாண்டு படித்துவந்தாா். இவா், கடந்த சில தினங்களாக கல்லூரிக்குச் செல்லாமல் ஊா் சுற்றி வந்தாராம். இதை அவரது தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மதன்பாபு ஜன. 6-ஆம் தேதி இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அம்மாபேட்டை காவல் ஆய்வாளா் இனியவன் மற்றும் காவல் துறையினா் மதன்பாபு உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து மதன் பாபுவின் தந்தை செந்தில்குமாா் (55) கொடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Dinamani
www.dinamani.com