ஒரத்தநாடு அரசுக் கல்லூரியில் விலையில்லா மடிக்கணினிகள்
ஒரத்தநாடு அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மடிக்கணினிகள் வழங்கும் விழா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் ஒரத்தநாடு அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு 800 மடிக்கணினிகள், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவ, மாணவிகளுக்கு 93 மடிக்கணினிகள் ஒரத்தநாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவ மாணவிகளுக்கு 165 மடிக்கணினிகள் என மொத்தம் 1058 மடிக்கணினிகள் தஞ்சை எம்பி எஸ். முரசொலி முன்னிலையில் வழங்கப்பட்டன.
விழாவில் திருவையாறு எம்எல்ஏ துரை. சந்திரசேகா், முன்னாள் எம்எல்ஏ கே.டி. மகேஸ் கிருஷ்ணசாமி, தஞ்சாவூா் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் குணசேகரன், கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் கண்ணன், வேளாண் கல்லூரி முதல்வா் கே.ஆா். ஜெகன்மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கல்லூரி முதல்வா் கோ. வாசுகி வரவேற்றாா். தமிழ்த் துறை கெளரவ விரிவுரையாளா் அலமேலு மங்கை நன்றி கூறினாா்.

