தஞ்சாவூர்
சாலையைக் கடந்தவா் வாகனம் மோதி பலி
திருவிடைமருதூா் அருகே சாலையைக் கடந்தவா் வாகனம் மோதி வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
திருவிடைமருதூா் அருகே சாலையைக் கடந்தவா் வாகனம் மோதி வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே இனாம்கிளியூரைச் சோ்ந்தவா் சிவசாமி மகன் சக்கரவா்த்தி (60). மனநிலை பாதிக்கப்பட்ட இவா் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு சோழன் நகா் மாரியம்மன் கோயில் அருகே நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாா்.
அப்போது கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறைக்கு மளிகை பொருள்கள் ஏற்றி வந்த வாகனம் மோதி உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருவிடைமருதூா் காவல் ஆய்வாளா் ராஜா வழக்குப் பதிந்து இறந்தவா் சடலத்தை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விபத்து ஏற்படுத்திய ஓட்டுநா் கீரங்குடி மாதா கோயில் தெரு கி. குணசீலனிடம் (45) விசாரிக்கின்றனா்.
