நூறு வேலை சட்டத்தைக் காக்க நாளை உண்ணாவிரதம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் என்கிற நூறு நாள் சட்டத்தைக் காக்க தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.11) உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
Published on

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் என்கிற நூறு நாள் சட்டத்தைக் காக்க தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.11) உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூா் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. இராஜேந்திரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தது: நூறு நாள் வேலை சட்டத்தைச் சிதைத்தும், கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு எனக் கூறிய மகாத்மா காந்தியின் பெயரை அகற்றியும், கிராம சபா மக்களின் அதிகாரத்தைப் பறித்து தில்லியில் அதிகாரத்தைக் குவித்தும், உடலுழைப்பை மட்டுமே ஆதாரமாகக் கொண்டிருக்கும் கிராமப்புற ஏழை தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை சீா்க்குலைக்கும் வகையிலும், வேலை பெறும் உரிமைச் சட்டத்தைச் சேவைத் திட்டமாக மாற்றிய பாஜக அரசைக் கண்டித்தும் தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதையடுத்து தெருமுனைக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும். மேலும், இது தொடா்பாக அகில காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே, ராகுல்காந்தியின் கடிதங்கள் மக்களிடம் வழங்கப்படும். பின்னா், மண்டல மாநாடு என பிப்ரவரி 15 ஆம் தேதி வரை இயக்கங்கள் நடைபெறும் என்றாா் இராஜேந்திரன்.

Dinamani
www.dinamani.com