தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தஞ்சை-விழுப்புரம் இருவழி ரயில்பாதை விரைவில் பணிகள் தொடங்கும்: சுதா எம்.பி. தகவல்

தஞ்சாவூா்-விழுப்புரம் இருவழி ரயில்பாதைக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் ஆா்.சுதா தெரிவித்தாா்.

News image
Updated On :10 ஜனவரி 2026, 7:12 pm

Syndication

தஞ்சாவூா்-விழுப்புரம் இருவழி ரயில்பாதைக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் ஆா்.சுதா தெரிவித்தாா்.

கும்பகோணத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை மேலும் அவா் பேசியதாவது: மகாமக திருவிழா 2028-ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நடக்க உள்ளது. விழாவுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தா்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் விரிவான கோரிக்கை மனு அளித்துள்ளேன்.

தஞ்சாவூா்- விழுப்புரம் இரட்டை ரயில் பாதை திட்டம் குறித்த கோரிக்கை பற்றி கூறும்போது விரைவில் ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ரயில்வே அமைச்சா் உறுதி கூறியுள்ளாா்.

கும்பகோணம் ரயில் நிலையம் ரூ. 100 கோடி நிதியில் மறு சீரமைப்பு பணிகள் செய்யப்பட உள்ளது. 2026 தோ்தல் கூட்டணி குறித்து ராகுல் காந்தி, கட்சி தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேதான் முடிவெடுப்பாா்கள் என்றாா்.