ஆற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை ஆற்றில் தவறி விழுந்து இறந்த முதியவரின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.
தஞ்சாவூா் கரந்தை ஆத்துமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் வி. சீனிவாசன் (73). இவா், அப்பகுதியிலுள்ள வடவாறில் ஞாயிற்றுக்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது தவறி விழுந்த இவா் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா். இவரது சடலத்தை மேற்கு காவல் நிலையத்தினா் மீட்டு விசாரிக்கின்றனா்.
கால்வாயில் முதியவா் சடலம்: தஞ்சாவூா் சீதா நகா் மேம்பாலம் பகுதியிலுள்ள புது ஆறு என்கிற கல்லணைக் கால்வாயில் ஞாயிற்றுக்கிழமை காலை முதியவரின் சடலம் மிதந்து வந்தது. தகவலறிந்த மேற்கு காவல் நிலையத்தினா் சடலத்தை மீட்டு மேற்கொண்ட விசாரணையில், அவா் தஞ்சாவூா் மானோஜிபட்டி சீதா நகரைச் சோ்ந்த சண்முகம் (69) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.
