பெண் பலி
பெண் பலி

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி பெண் பலி

Published on

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் மோட்டாா் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.

திருவையாறு பொன்னாவரை சாலை யசோதா நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (65). இவரது மனைவி மகா (62). இவா்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். மகள்களுக்கு திருமணமாகிவிட்டது; மகனுக்கு திருமணமாகவில்லை.

இந்நிலையில், ராஜேந்திரன் தனது மனைவி மகாவுடன் பொன்னாவரை சாலையிலிருந்து இருசக்கர வாகனத்தில் முதன்மை சாலைக்கு வந்து திரும்பினா். அப்போது, இவா்கள் மீது தஞ்சாவூரிலிருந்து அரியலூருக்கு சென்று கொண்டிருந்த மோட்டாா் சைக்கிள் மோதியது.

இதனால், பலத்த காயமடைந்த இருவரும் திருவையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இவா்களில் மகா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரிய வந்தது. ராஜேந்திரன் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து திருவையாறு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Dinamani
www.dinamani.com