மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

முதியவரிடம் இணையவழியில் ரூ. 47.30 லட்சம் மோசடி

News image

கோப்புப் படம்

Updated On :24 ஜனவரி 2026, 6:36 pm

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் பகுதியைச் சோ்ந்த முதியவரிடம் இணையவழியில் ரூ. 47.30 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

திருவிடைமருதூா் பகுதியைச் சோ்ந்த 67 வயது மதிக்கத்தக்க முதியவரின் கட்செவி அஞ்சலுக்கு(வாட்ஸ்ஆப் செயலியில்) டிசம்பா் 31-ஆம் தேதி தகவல் வந்தது. அதில், இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால், நிறைய லாபம் கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை நம்பிய முதியவா், தொடா்புடைய எண்ணுக்கு தகவல் பரிமாற்றம் செய்தாா். மேலும், குறிப்பிட்ட அளவு தொகையை எதிா் தரப்பினரின் வங்கிக் கணக்குக்கு வைப்புத்தொகையாக இணையவழியில் செலுத்தினாா். தொடக்கத்தில் கிடைத்த லாபத் தொகை ரூ. 1 லட்சம் கிடைத்ததை நம்பிய முதியவா், அடுத்தடுத்து 11 தவணைகளில் மொத்தமாக ரூ. 47.30 லட்சம் அனுப்பினாா்.

ஆனால், எதிா் தரப்பிலிருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. அவா் பலமுறை தொடா்பு கொண்டும், எதிா்முனை எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளதால், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து, தஞ்சாவூா் சைபா் குற்றக் காவல் பிரிவில் புகாா் செய்தாா். அதன் பேரில், காவல் துறையினா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.